TITLE 1

en iniya kadhal

TITLE 2

EN INIYA KADHAL

TITLE 3

EN INIYA KADHAL

TITLE 4

EN INIYA KADHAL

TITLE 5

EN INIYA KADHAL

TITLE 6

EN INIYA KADHAL

TITLE 2

EN INIYA KADHAL

TITLE 2

EN INIYA KADHAL

Thursday, 5 June 2014

வைரமுத்து கவிதைகள் audio II

Click her to play








Click her to play







Click her to play








Click her to play







Click her to play







Click her to play









Click her to play








Click her to play







Click her to play




வைரமுத்து கவிதைகள் audio I

Click Here To Play






Click Here To Play

Click Here To Play

Click Here To Play




Click Here To Play

Click Here To Play

Click Here To Play


எனது கருப்புப் பெட்டி



                             எனது கருப்புப் பெட்டி(55kb pdf format மின்னூல்)  

தேவதைகளின் தேவதை

thevathai


தேவதைகளின் தேவதை(214kb pdf format மின்னூல்)

Wednesday, 4 June 2014

இனிய இரவு



வாடை காற்று வருடுதோ;
       உன் காதோரக் கூந்தலை.

 வெக்கை  வேட்டையாடுதோ;
        உன் மெல்லிய தேகத்தை.

வாசம் தரும் கூந்தல் மனமோ;
             கொஞ்சம்
 என் சுவாசத்தில் கலந்தாடுமோ.

உன் மூச்சுக் காற்றுதான்;
என் நெஞ்சோடு உறவாடுமோ.
              அல்ல
நான் வாழ்வதே இனிவரும்
இரவெலாம் உன்னோடு உறவாடவோ.   

உன் கூந்தல்!

உன் கூந்தல்!
முகத்தின் ஒளியில் கருகியதுதான் - உன்
கூந்தலோ!

அதன் கருமை கண்ட
அந்த அண்டங் காக்கைக்கும்
ஆனந்தம்!

தனக்கொன்று இல்லை என்று
தனக்குள் வருந்திய நிலவின்
தாக்கம் எனக்கு மட்டும்
தெரியும்!

கார்கால மேகமென கண்ட
கானகத்து மயிலும்
கொண்டை உயர்த்தி
தோகை விரிக்கக்
கண்டேன்!

தமிழ் கரைக் கண்ட
நக்கீரனுக்கு - நீ
முன்னோளாகி இருந்தால்
கூந்தலில் மணம்
உண்டோ என்ற வாதம்
வந்திருக்குமோ ?

உன்னை படைத்த
உன்னத பிரம்மனுக்கு,
உன் முகம் என்னும்
உல்லாச நிலவுக்கும்
உலகமெனும் உருண்டைக்கும்
கூந்தலெனும் உறவு வைக்க
ஆசை!

சன்னலோரத் தென்றலில்
சின்னதாய் அசையும்
உன் கூந்தல் கண்டு
மெல்லிய கொடியிலாடும்
மலர்ந்த மல்லிகைக்கும்
உன் கூந்தலேறி
ஊஞ்சல் ஆட
ஆசை!

ஒரு நிலவில் சில நட்சத்திரங்கள்






அன்று தொடங்கிய மழை
சாரலாகி ஓடிப் போனது!
வாசல் தெளிக்கும் அளவுகூட
பூமி நனையவில்லை;
ஆனாலும்,
என் மனது தெப்பலாக
நனைந்திருந்தது
நீ மழையில் நடந்து சென்றதில்!
************************
ஒற்றைக் குடைக்குள்
நெருக்கமாகக்
காதலர்கள் நகர்ந்தால்
கோபப்படுகிறான் வருணன்!
மழை பெருக
சாரல் தவிர்க்க
மேலும் நெருக்கமாக
மீண்டும் கோபம்
மீண்டும் சாரல்
மீண்டும் நெருக்கம்
************************
உன் கால்தடத்தில்
தேங்கி இருந்த மழைநீரைத்
தீர்த்தமென்கிறேன்;
அப்படியென்றால்
நீ தேவதைதானே!
************************
கடலுக்குள் விழுந்த
மழைத்துளி போல்
பத்திரப்படுத்திவிட்டேன்
என்னுள் விழுந்த உன்னை!
************************
மழையில் நனைபவளே!
தெரிந்து கொள்
உன் அழகை பிம்பமாக்கிக் கொள்ள
வான் அவன் விடும்
கோடிக் கோடி கண்ணாடிகள் அவை!
************************
எல்லோரையும் வெறுமனே
நனைத்துவிட்டுச் செல்கிறது மழை!
உன்னில் மட்டுமே
அதுவே ரசித்து உள்ளிறங்கிப் போகிறது!
************************
பெரிதாய்ப் பொழியும் மழையில்
நனைந்து நிற்கிறேன்;
உன் கால்தடத்தைத் தனியே
நனையவிட்டுச் செல்ல
நான் ஒன்றும் உன்னைப் போல்
கொடுமையானவன் அல்ல!
************************
பெரும் பாலையில் தவறிப்
பெய்துவிட்ட
மழை நீ
எனக்கு!
************************
எவ்வளவு பத்திரமாய்
நீ நடந்தாலும்
உன்னையும் அறியாமல்
வழியெங்கும்
பெய்துகொண்டே செல்கிறது
உன் அழகுமழை!
************************
மழை நேரத்தில்
திரும்பும் பக்கமெல்லாம்
தெரியும் மழைக்கீற்று மாதிரி
என் மனதில் திரும்பும் பக்கமெல்லாம்
நீ! நீ! நீ!
************************
தண்மையான
உன்னைச் செதுக்குகையில்
சிதறிய
சின்னச் சின்னச் சில்லுகள்தாம்
மழை!
************************
சுகம்!
மழையில் நனைந்து கரைதலும்!
உன் பிடியில்
கரைந்து தொலைதலும்!
************************
வானம்,
பெய்ய மழை
பெய்யப் பெய்யப் பெருமழை!
நீ,
காண அழகு
காணக் காணப் பேரழகு!
************************
என்னை அந்தி முதல்
ஆதிவரை நனைத்துச்
செல்கிறீர்கள்!
பலநேரங்களில் நீயும்!
சிலநேரங்களில் மழையும்!
************************
உடுத்திக்கொள்ள
உன் கிழிந்த சேலைதான் வேண்டுமாம்
அம்மணமாய் விழும்
அம்மழைக்கு!
************************
இதுவரை துரத்தித் துரத்திக்
கிட்டியதில்லை!
தானாய்க் கிட்டியதுதான்
நீயும் மழையும்!
************************
நேற்றைய
என் கோபத்தையும்
உன் வருத்தத்தையும்
துவைத்துத் துடைத்துப்
போயிருந்தது
இரவில் பெய்த மழை!
************************
என்னவோ அறியேன்
எப்படி என்றும் அறியேன்
என் உயிர்வரை நுழைந்து
மனம் ஊடுருவ உனையும்
மழையையும் மட்டும் அனுமதிக்கிறேன்!
************************
எத்தனை மழைத்துளிகள்
மண் முத்தமிடுமிடுகின்றன என
எவ்வளவு நேரம் எண்ணிக் கொண்டிருப்பது
சீக்கிரம் வந்துவிடு!
************************
என் மீது
ஒரு மழையாய்த் தான்
பொழிந்து செல்கிறது
நீ சிந்தும் மென்னகை!
************************
நீ
கோபம் காட்டும் நாட்களில்
கண்ணாடிச் சில்லுகளாய்க்
குத்திச் செல்கின்றன
மழைத்துளிகள்!
************************
உன் கன்னக்குழியில்
தங்கும் அந்த ஒற்றைத்துளி
மழை அமுதத்தின் விலை
காதல்!
************************
நீ தொட்டுப் பேசுகிற நேரங்களில்
மழை ஞாபகம்
தவிர்க்க இயலவில்லை எனக்கு!
************************
மழையில் நனைந்த உன் முகம்
ஒரு நிலவில்
சில நட்சத்திரங்கள்!
************************
உன் மெளனம் கலைந்த கணத்தில்
மனம் கொள்ளும் வேகத்தில்
வானம் உடைத்து
நொறுங்கி விழுகிறது
மழை!
************************
நனைய நீ ஊரில் இல்லை
என்பதற்காக
எட்டியே பார்க்கவில்லை
மழை!
************************
முதன்முதலாய் மழையுடன்
பெண்ணை ஒப்பிட்டுக் கவி சமைத்தவன்
யாரென யாராவது கேட்டால்
என்னைக் கை காட்டு!
பெண்ணென்றால் அது
நீ மட்டும்தானே!
************************
ஜன்னலில் பார்த்ததைவிடவும்
பக்கத்தில் பார்த்தல்
அழகு!
நீயும்!
மழையும்!
************************
வார்த்தையாகக் கூட இல்லை
ஒரு எழுத்தாகக் கூட இல்லாதவனை
ஒரு கவிஞனாய் மாற்றிய
பெருமை
உனக்கும்
மழைக்கும் மட்டுமே!
************************
என்னைக் கொஞ்சுகையில்
கைகால் முளைத்த
மழையாகிறாய் நீ!
************************
மழையும் நீயும்
நனைக்கிறீர்கள்
நனைப்பதாய்ச் சுடுகிறீர்கள்
சில நேரங்களில்!
************************
நின்ற பின்னும்
சிறிது நேரம்
இலை தங்கும் மழை போல
நீ நின்று போன
இடத்தில் எல்லாம்
கொஞ்சநேரமாவது தங்கிச்
செல்கிறது அழகு!
************************
நீ மார்பில்
சாயும் தன்மையில்
என்னை அறியாமல்
நானே மழையாகிறேன்!
************************
என் மனம்
பட்டுப் போகக்கூடும்
எனும்போதெல்லாம்
மழையாகப் பெய்துபோகிறாய்
நீ!
************************
மழைத்துளிக்காகப்
புதைந்து காத்திருக்கும்
விதைகள் போல!
உன் விழிப் பார்வைக்காகக்
காத்திருக்கின்றது
என் காதல்!
************************
கருமை வர்ணம் பூசித்திரிந்த
அம்மேகத்தின் பிள்ளை
மண்தீண்டலில் எழுந்த
மண் வாசனை
நுகர்தலில் உணர்கிறேன்
உன் வாசனை!
************************
வானம் கிழிக்கும்
வெளிச்சத்தில் – எழும்
இடி ஒலியில்
சோ! என
மண் நனைத்து
மண் நிறைக்கிறது மழை!
என் உயிர் நனைத்து
என் உயிர் நிறைக்கும் உன் உயிர்!
************************
நீயும் நானும்
இரவில் நடந்துவர
சொல்லாமல் கொள்ளாமல்
ஓடிவந்து நனைத்து
விளையாடிய
அச்சிறுபிள்ளை சிறுமழையை
பத்திரப்படுத்தி வைத்திருக்கிறேன்
கண்ணிலும்
உயிரிலும்!
************************
மண்ணுள் ஊடுருவிச் செல்லும்
மழையென!
என் உள்ளம்
தூர்ந்து நுழைகிறாய் நீ!
************************
எதுவாக நீ வந்தாலும்
இன்பமே!
ஆனால்,
மழையாக வந்தால்
பேரின்பம்!
************************
நனைந்து சென்ற உன்னை
ஆயிரமாயிரம் பிம்பமாய்க்
காட்டியது மழை!
************************
சுத்தமான
அந்த மழைத்துளி
பார்க்கும்போதெல்லாம்
உன் ஒப்பனையற்ற முகம்
முன்னால் நிற்கிறது!
************************
நனைத்து நனைத்தே
நெருக்கமான
மழை போலவே
சுகமாகிறாய்
நீயும்!
************************
நீ வருவாய் என்பதை
முன்னமே வந்து சொல்லிவிட்டுப்
போய்விடுகிறது
மழை!
************************
பைத்தியமாகிவிடத் தோன்றுகிறது
மழையில் உறையும்போதும்
உன் நினைவுகளில் நனையும்போதும்!
************************
பூமியைச் சுத்தமாக்கிப்
புதியதாக்குவது மழை!
என்னை
துடைத்துப் புதியவனாக்குவது
உன் பார்வை!
************************
தேடிக் கொண்டே
இருக்கிறேன்!
சேலை விலகிய நேரத்தில்
தொட்டு விளையாடி
ஒரே ஒரு முறை உனை
அவஸ்த்தைக் கொள்ளச் செய்த
அச்சிறுமழையை!
************************
மழை ரசித்தாலும்
உனை ரசித்தாலும்
நேரம் கடப்பதும்
தெரிவதில்லை!
உயிர் கரைந்து
ஓடுவதும் தெரிவதில்லை!
************************
உனைத் தொட்ட பின்
அதே துளி!
கவனி அதே துளி
ஏன் எனையும் தீண்டவில்லை எனக்
கோபித்துக் கொண்டேன்
மழையிடம் நேற்று!
************************
மழை பெய்யும்
நாட்களெல்லாம்
உனைக் கண்ட நாட்களாக
அமைந்துவிடுகிறது!
************************
உனைக் கண்ட நாட்களுக்கே
என் நாட்காட்டியில்
இடமிருக்கிறது!
போனால் போகட்டும்
உனக்காக
மழை கண்ட நாட்களையும்
சேர்த்துக் கொள்கிறேன்!
************************
மழை தொட்டால் மட்டுமே
சிலிர்த்தவன் நான்!
நான் தொட்டால் மட்டுமே
சிலிர்ப்பவள் நீ!
**********
**************
தெரியும்,
மழையில் நனைகையில் சிலசமயம்
நான் பருகும்
ஒவ்வொரு துளியிலும்
இருக்கிறாய் நீ!
************************
எப்போதிலிருந்து இப்படி எழுதுகிறீர்கள்
என்றாய்!
நீ மழையில் நனைவது
கண்டதிலிருந்து என்றேன்!
ச்சீ என வெட்கப்பூ பூத்தாய்!
அடுத்த மழை பெய்யத் தொடங்கியது
நீயும் நனையத் தொடங்கினாய்
நானும் இன்னமும் அழகாய் எழுதத் தொடங்கினேன்!
************************
சந்தோசம்
துக்கம்
எதற்கும் அழுதுவிடாதே!
நமக்காக தான்தான்
அழுவேன் என
அடம்பிடித்து வரம் வாங்கியிருக்கிறது
மழை!
************************
எப்படித் தேர்வு செய்கிறாய்
உன்னை நனைப்பதற்கான
மழையை!
************************
மழையில் சிக்கிக் கொண்ட
பெருவியாதிக்காரனின் தவிப்பாய்
உன் விழிதேடிக் கிடக்கிறது
என் காதல்!
************************
உனைப் பார்க்க வரும்போதெல்லாம்
மண் அன்னையை நோக்கிவரும்
மழைப் பிள்ளையென
குதித்தோடி வருகிறேன்!
************************
உன் இதழில் உணர்ந்தேன்
சுவையில்லா ஒரு சுவையான
மழையின் சுவையை!
************************
உன்னை நினைத்தபடி
வானம் நோக்கி
இருந்தேன்!
நெற்றி விழுந்து
நெஞ்சுவரை நீந்திய
மழையின் தண்மை
இன்னமும் அதிகமாய்
ஞாபகப்படுத்திவிட்டது உன்னை!
************************
உன் மீது கோபம் காட்டும் நாட்களில்
என்னை மட்டும் தீண்டாமல்
விலகிப் பெய்துவிட்டுச் செல்கிறது மழை!
************************
நீ பேசாமல் இருந்தால்
என் வானமெங்கும்
மேகமூட்டம்!
************************
நீ கோபம் காட்டும் நாட்களில்
என் மனமெங்கும் பெய்யும்
வலிக்க வலிக்கக்
கல் அடி மழை!
ஆலங்கட்டி மழை!
************************
மழை மண் விழுந்த அடுத்தநாள்
முளைத்துவிடும் விதையென
நீ கண்ணுள் விழுந்த
அடுத்த நொடி முளைத்துவிட்டான்
என்னுள் காதல்!
************************
நீ மழையில் நனைந்த
லயத்தில் கண்டுக்கொண்டேன்
மழையே ரசிக்கும்படி
எப்படி மழையில்
நனைவதென!
************************
பெருமழைக்கே
பயந்து போகாதவன்
உன் விழியோரம் வழியும்
ஒருதுளிக்குப்
பதறிப் போகிறேன்!
************************
உன்னைக் கொஞ்சுவதில்
எனக்குப் போட்டி
மழை மட்டுமே!
************************
மண் விழுந்த மழை மட்டுமா?
நீயும்
கவிதை நடையில்தான்
நடக்கிறாய்!
************************
திட்டிக் கொண்டே
துப்பட்டா கொண்டு நீ
தலை துவட்டுகையில்
எனக்கு
இன்னமும் செல்லமாகிப் போகிறது
மழை!
************************
உன்னில்
கவிதை காணும் இடமெல்லாம்
ஒரு புள்ளி வைத்துச்
செல்கிறது மழை!
************************

புரியாத புத்தகம்

♥நான் உன்னிடம் கேட்டிருந்த
அந்த புத்தகத்தை
நீ,
என்னிடம் தந்திருந்தாய்.
 
♥படிக்க திறந்த நான்
பதறிப் போனேன்,
வார்த்தைகள் புரியாமல்
குழம்பி போனேன்,
 
♥உன் அணைப்பின் அழுத்தத்தில்
அசந்து போய்
மயக்கத்தில் மாறி மாறிக்
கிடக்கின்றன,
அந்த புத்தகத்தின்
அத்தனை எழுத்துக்களும்,
 
♥முயற்ச்சித்துப் பார்த்தேன்
முடியவில்லை..
மூர்ச்சை ஆகி
முடங்கி கிடந்த
அந்த எழுத்துக்களை
எழுப்பி விட,
 
♥திருப்பித் தருகிறேன்,
சரி செய்து தா
மயங்கிப்போய்
மாறிக்கிடக்கிற
அந்த எழுத்துக்களை.
 
♥மறுபடியும்
மயங்க செய்து விடாதே..
உன்
அணைப்பைத் தாங்கும்
அருகதை
அந்த எழுத்துக்களுக்கு இல்லை…

காதலின் ரகசியம்

kathalin rakasiyam
காதலின் ரகசியத்தை , அழகாக
அதே சமயம் சுருக்கமாக எடுத்துச் சொல்லும் குட்டிப்புத்தகம்..
காதல் என்றால் என்ன?,
அது ஏன் வருகிறது? என காதலை பற்றிய சகல பரிமானங்களையும் விஞ்ஞான பூர்வமாக 
சுவைபட விளக்கும் புத்தகம்.

 காதலின் ரசிகர்கள்,காதலர்கள்,காதலின் காதலர்கள் என சகலமானவர்களும் அவசியம் தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டிய தகவல்கள் அடங்கிய 18 பக்க குட்டிப்புத்தகம் .

முத்திரைக்கவிதைகள்

17.11.2002 ல் ஆனந்த விகடனுடன் இலவச இணைப்பாக வந்த குட்டிப்புத்தகம்
பல்வேறு கவிஞர்கள்,பல்வேறு தலைப்புகளில்,எழுதிய அற்புதமான கவிதைகளின் தொகுப்பு …..
Download செய்ய இங்கு க்ளிக் செய்யவும்

DOWNLOAD (File Size:50KB)

கவிஞர் அறிவுமதி அவர்களின் “நட்புக்காலம்” மின்னூல்

                                  நட்புக்காலம்

 
 
அற்புதமான புத்தகம்…ஆண் , பெண் நட்பின் ஆழத்தினை அழகாக படம் பிடித்துக்காட்டுகிற கவிதைத்தொகுப்பு.
புரிந்து கொள்ளப்படாத
நாள்களின்
வெறுமையான
நாட்குறிப்பில்
தாமாகவே வந்து
அமர்ந்திருக்கிறது
எனக்குப்
பிடித்தமான
உன் புன்னகை.

***

வெறுமையான நாட்குறிப்புகள் -

குறிப்பதற்கு ஏதுமற்ற நாள்.

குறிப்பதற்கு உன்னை சந்திக்கவில்லை.

அதனால், நாட்குறிப்பும் வெறும் தாளாயிற்று.

நீயன்றி வேறோர் உலகம் என்று ஒன்றிருந்தால், நாட்குறிப்பிற்கு எத்தனை எத்தனையோ செய்திகள் கிடைத்திருக்கும்.

நீயும் நின் நட்பும் மட்டுமே என் உலகம் என்று ஆகிப் போன பின், உன் சந்திப்பைத் தவிர வேறென்ன நிகழ்வு குறிக்கத் தக்கதான செய்திகளாகி விடும் எனக்கு?

அதனால் அந்தப் பக்கங்கள் வெறும் பக்கங்களாகி விட்டன.

உதடு விரிந்து நீ புன்னகைக்கும் பொழுது, வெளிப்படுமே உன் பல்வரிசையின் வெண்மை - அந்த வெண்மையைப் போல் களங்கமின்றி, பளிச்சென இருக்கும் அந்த வெற்றுக் காகிதங்கள் - ஒரு வேளை உன் புன்னகைகள் தானோ?
 
 
 
 
டவுன்லோட் செய்ய இங்கு’க்ளிக்’கவும்

            DOWNLOAD

 
 
 
 
 

வைரமுத்துவின் ”தண்ணீர் தேசம்”







கவிதை நடையில் ஒரு காதல் காவியம்.

என்னை மிகவும் கவர்ந்த புத்தகங்களில் ஒன்று.


இப்புத்தகம் பற்றி வைரமுத்துவின் வார்த்தைகள்…


இனிய‌வ‌ர்க‌ளே.
ஒரு வேள்வி செய்தேன்.
வ‌ர‌ம் வ‌ந்திருக்கிற்தோ
இல்லையோ வேள்விக்கு
செல‌வான‌ விறகும் நெய்யும் நிஜ‌ம்.
இந்த‌த் த‌ண்ணீர் தேச‌த்திற்காக‌
கொங்குதேர் வாழ்க்கை
அஞ்சிறைத் தும்பியாய் நான்
அறிவுசேர்க்க‌ அலைந்த‌து நிஜ‌ம்.
த‌மிழுக்கு இது புதிய‌து
என்று தமிழ‌றிந்தோர் சில‌ரேனும்‌
த‌குதியுரை சொன்னால்,
இத‌ற்காக‌ நான் ஓராண்டாய்
இழ‌ந்த‌ ச‌க்தி ஒரு நொடியில்
ஊறிவிடும்.
எந்த‌த் தொட‌ருக்கும் நான்
இத்த‌னை பாடு ப‌ட்ட‌தில்லை


                                           - க‌விஞ‌ர் வைர‌முத்து

DOWNLOAD

காதல்

kadhal

ரோஜா…

beautiful_red_rose_wallpaper

மூன்றாம் பிறை

pirai

நெற்றி முடி

Bhavana-0012

நினைவுகள்

alone

மச்சக்கன்னி

Untitled-1

கல்லறைப் பூக்கள்

indian army

மருதாணி

maruthani1

காதல்

love

தென்றல்

Thendral

உன் பார்வை....!


உனக்கென்ன ஒரு
பார்வையை வீசி விட்டாய்
நான் அல்லவா வைக்கோலாய்
பற்றி எரிகிறேன்!

தபு சங்கரின் நெஞ்சவர்ணக்கிளி இலவச Download


   காதல் கவிதைகள் எழுதும் பொறுப்பை மொத்தமாக கவிஞர் தபு சங்கர் அவர்களுக்கு குத்தகைக்கு விட்டு விடலாம் என்று அவரது புத்தகங்களை படிக்கும் போதெல்லாம் என் மனம் சிந்திக்க துவங்கி விடுகிறது .

  நெஞ்சவர்ணக்கிளி என்ற தலைப்பு தாங்கி நிற்கும் இந்த கவிதை தொகுப்பு காதல் ஞாபகங்களின் தொகுப்பு, “சொல்லப்படாத எல்லாக் காதலுக்கும்” என்ற  சமர்ப்பணத்தோடு கவிதைகள் துவங்கப் படுகின்றன….
 
   இந்த கவிதைப் புத்தகத்தை “கவிதை தொகுப்பு” என்று சொல்வதைவிட “காதல் நினைவுகளின் மூட்டை” என்று சொல்லலாம். இந்த நினைவு மூட்டையிலிருந்து ஒரு ஞாபக குறிப்பு…
 
 
 
“வேறு யாரையும் மட்டுமல்ல
என்னைக்கூட நினைப்பதில்லை
உன்னை நினைக்கும்
இந்த மனதால்” 
 


இந்த புத்தகத்தை Down Load செய்ய கீழே உள்ள லிங்க் ஐ கிளிக் செய்யவும்.
                                                          

                                                               DOWLOAD