கவிதை நடையில் ஒரு காதல் காவியம்.
என்னை மிகவும் கவர்ந்த புத்தகங்களில் ஒன்று.
இப்புத்தகம் பற்றி வைரமுத்துவின் வார்த்தைகள்…
இனியவர்களே.
ஒரு வேள்வி செய்தேன்.
வரம் வந்திருக்கிற்தோ
இல்லையோ வேள்விக்கு
செலவான விறகும் நெய்யும் நிஜம்.
இந்தத் தண்ணீர் தேசத்திற்காக
கொங்குதேர் வாழ்க்கை
அஞ்சிறைத் தும்பியாய் நான்
அறிவுசேர்க்க அலைந்தது நிஜம்.
தமிழுக்கு இது புதியது
என்று தமிழறிந்தோர் சிலரேனும்
தகுதியுரை சொன்னால்,
இதற்காக நான் ஓராண்டாய்
இழந்த சக்தி ஒரு நொடியில்
ஊறிவிடும்.
எந்தத் தொடருக்கும் நான்
இத்தனை பாடு பட்டதில்லை
- கவிஞர் வைரமுத்து
0 comments:
Post a Comment