♥நான் உன்னிடம் கேட்டிருந்த
அந்த புத்தகத்தை
நீ,
என்னிடம் தந்திருந்தாய்.
♥படிக்க திறந்த நான்
பதறிப் போனேன்,
வார்த்தைகள் புரியாமல்
குழம்பி போனேன்,
♥உன் அணைப்பின் அழுத்தத்தில்
அசந்து போய்
மயக்கத்தில் மாறி மாறிக்
கிடக்கின்றன,
அந்த புத்தகத்தின்
அத்தனை எழுத்துக்களும்,
♥முயற்ச்சித்துப் பார்த்தேன்
முடியவில்லை..
மூர்ச்சை ஆகி
முடங்கி கிடந்த
அந்த எழுத்துக்களை
எழுப்பி விட,
♥திருப்பித் தருகிறேன்,
சரி செய்து தா
மயங்கிப்போய்
மாறிக்கிடக்கிற
அந்த எழுத்துக்களை.
♥மறுபடியும்
மயங்க செய்து விடாதே..
உன்
அணைப்பைத் தாங்கும்
அருகதை
அந்த எழுத்துக்களுக்கு இல்லை…
0 comments:
Post a Comment