Wednesday, 4 June 2014

கவிஞர் அறிவுமதி அவர்களின் “நட்புக்காலம்” மின்னூல்

                                  நட்புக்காலம்

 
 
அற்புதமான புத்தகம்…ஆண் , பெண் நட்பின் ஆழத்தினை அழகாக படம் பிடித்துக்காட்டுகிற கவிதைத்தொகுப்பு.
புரிந்து கொள்ளப்படாத
நாள்களின்
வெறுமையான
நாட்குறிப்பில்
தாமாகவே வந்து
அமர்ந்திருக்கிறது
எனக்குப்
பிடித்தமான
உன் புன்னகை.

***

வெறுமையான நாட்குறிப்புகள் -

குறிப்பதற்கு ஏதுமற்ற நாள்.

குறிப்பதற்கு உன்னை சந்திக்கவில்லை.

அதனால், நாட்குறிப்பும் வெறும் தாளாயிற்று.

நீயன்றி வேறோர் உலகம் என்று ஒன்றிருந்தால், நாட்குறிப்பிற்கு எத்தனை எத்தனையோ செய்திகள் கிடைத்திருக்கும்.

நீயும் நின் நட்பும் மட்டுமே என் உலகம் என்று ஆகிப் போன பின், உன் சந்திப்பைத் தவிர வேறென்ன நிகழ்வு குறிக்கத் தக்கதான செய்திகளாகி விடும் எனக்கு?

அதனால் அந்தப் பக்கங்கள் வெறும் பக்கங்களாகி விட்டன.

உதடு விரிந்து நீ புன்னகைக்கும் பொழுது, வெளிப்படுமே உன் பல்வரிசையின் வெண்மை - அந்த வெண்மையைப் போல் களங்கமின்றி, பளிச்சென இருக்கும் அந்த வெற்றுக் காகிதங்கள் - ஒரு வேளை உன் புன்னகைகள் தானோ?
 
 
 
 
டவுன்லோட் செய்ய இங்கு’க்ளிக்’கவும்

            DOWNLOAD

 
 
 
 
 

0 comments:

Post a Comment